தையிட்டி போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் பல்கலை மாணவர்கள் குழாம்  .

தையிட்டி போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் பல்கலை மாணவர்கள் குழாம் .

  • local
  • January 3, 2026
  • No Comment
  • 24

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை(3) பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தையிட்டி போராட்த்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில்
யாழ்.பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக பெருமளவிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர் .

இந்தநிலையில் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலையுடன் வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரை, காங்கேசன்துறை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவர்களை தையிட்டிக்கு செல்ல விடாது, பேருந்தில் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தையிட்டியில் இடம் பெற்ற சட்ட விரோத விகாரக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்பவர்களின் விவரங்களை பதிவு செய்து பொலிசார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற சிவகுரு ஆதின முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் பொலிசார் மறித்து பதிவுகளை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக பெரும் பரபரப்பு நிலவுகின்றது .

 

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…