டித்வா புயலினால் பாதிக்கப்படடவர்களுக்கான  இழப்பீடு வழங்கும்  நிகழ்வு ஆரம்பம்

டித்வா புயலினால் பாதிக்கப்படடவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

  • local
  • January 9, 2026
  • No Comment
  • 15

2025 டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்தத் திட்டம் இன்று ஆரம்பமாகியது .

அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, இராஜாங்கனை, சிறிமாபுர,ஹந்துன்கம பகுதிகளிலும் குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, தொடம்கஸ்லந்த,நிகவரெட்டிய, விதிகுலிய சந்தி -பகுதிகளிலும் இந்த வேலைத்திட்டம் ஆரம்பமானதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களினால் 6500 வீடுகள் முற்றாகவும் 113,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் கீழ் முழுமையாக சேதமடைந்த வீடொன்றுக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

முதல் கட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக காணி வைத்திருக்கும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக தெரிவித்தார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…