ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்
- world
- June 11, 2025
- No Comment
- 36
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் .
இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதனை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நடைபெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது
அத்துடன் இந்த விஜயத்தின்போது, வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில், ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் உள்ளிட்ட இரு தரப்பு ஆர்வமுள்ள பல விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது .