சூரிய மின்சக்தி படல மின்சார உற்பத்தி இலங்கை மின்சார சபை யின் ஒரு மைல்கல்
- local
- May 16, 2025
- No Comment
- 35
இவ்வாண்டு தொடக்கம் முதல் மே மாதம் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் இது ஒரு மைல்கல் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த முன்னேற்றம் இலங்கையில் மின்சார துறையின் எதிர்கால உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.