சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மத குருமார்கள்! இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மத குருமார்கள்! இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • local
  • August 9, 2023
  • No Comment
  • 112

நாட்டில் 56 மதகுருமார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற சிறைச்சாலைகள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,கொலை, பாலியல் வன்கொடுமை, பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகங்கள் ,நிதி மோசடி மற்றும் புதையல் தோண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மதகுருமார்கள் இவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இதில் தண்டனை அனுபவிக்கும் மதகுருமாரின் எண்ணிக்கை 34 எனவும் அதிக அளவிலான மத குருமார்கள் பௌத்த துறவிகள் எனவும், மேலும் இந்து மதகுருமார்கள்  மூவரும், இஸ்லாம் மதகுருமார் இருவரும் சிறையில் தண்டனை அனுபவிக்கின்றனர்.

தண்டனை கால அறிவிப்பு 

மேலும் சந்தேகநபர்களாக 21 மதகுருமார் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மத குருமார்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பௌத்தப்பிக்குகள் எனவும், அவர்களின் எண்ணிக்கை 19 பேர் எனவும்  தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 19 பௌத்த மதகுருமார்கள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் இரண்டு பௌத்த மத குருமார்கள் கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அனுராத ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.


Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply