சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரேமலால் விஜேரத்ன காலமானார்

  • local
  • April 18, 2025
  • No Comment
  • 41

 ஐந்து தசாப்தங்களுக்கும் அதிக காலம் ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் உதவி ஆசிரியராகவும் செயற்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரான பிரேமலால் விஜேரத்ன தனது 75ஆவது வயதில் காலமானார்.

‘தவச’ பத்திரிகையில் தனது ஊடக செயற்பாடுகளை ஆரம்பித்தமையின் மூலம் பிரேமலால் விஜேரத்ன ஊடகத்துறைக்குள் பிரவேசித்தார்.

பின்னர் இரிதா பெரமுண, மவ்பிம, ஜனயுகய, சண்டே லீடர் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்த அன்னார் பொலிஸ், சுகாதாரத்தை போன்று அரசியல் துறையைிலும் தடம்பதித்த ஊடகவியலாளராவார்.

சிரச ஊடக வலையமைப்பின் வானொலி பிரிவிலும் ஒரு தசாப்தத்திற்கும் அதிக காலம் சேவையாற்றிய அவர், சிரச செய்திப்பிரிவைக் கட்டியெழுப்பும் யுகத்திற்கும் வலுசேர்க்கும் வகையில் செயற்பட்டார்.

உயிரிழக்கும்போது அவர் ‘மவ்ரட’ பத்திரிகையின் உதவி ஆசிரியராக செயற்பட்டார்.

பிரேமலால் விஜேரத்ன 2 பிள்ளைகளின் தந்தையாவார்.

அன்னாரது பூதவுடல் இன்றிரவு(17) முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இலக்கம் 240, வென்னவத்த வீதி, வெல்லம்பிட்டிய முகவரியிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டிருக்கும்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை பிற்பகல் 04 மணிக்கு கொட்டிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…