கொத்மலை பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கானஇழப்பீட்டு தொகை அவரவர்   பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைப்பு

கொத்மலை பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கானஇழப்பீட்டு தொகை அவரவர் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைப்பு

  • local
  • May 14, 2025
  • No Comment
  • 37

இறம்பொடை – கெரண்டி எல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உரிய பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய, உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் வீதம் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

விபத்தில் உயிரிழந்த 23 பேர் வசித்துவந்த, திஸ்ஸமஹாராம, லுணுகம்வெஹெர, வெலிமடை, ஹல்துமுல்ல, எல்ல, குண்டசாலை, பமுணாகொட்டுவ, பண்டுவஸ்நுவர மேற்கு, பொல்பித்திகம, வண்ணாத்திவில்லு, சிலாபம், புத்தல, தனமல்வில, வெல்லவாய, கந்தளாய், ரம்பேவ ஆகிய பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…