அரசாங்கத்தின் அதி சொகுசு வாகன ஏலம் நிறைவடைந்துள்ளது

அரசாங்கத்தின் அதி சொகுசு வாகன ஏலம் நிறைவடைந்துள்ளது

  • local
  • May 15, 2025
  • No Comment
  • 54
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்திய ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமிற்காக வழங்கியிருந்த 26 வாகனங்கள் இவ்வாறு ஏலமிடப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 17 வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
அதன்படி, BMW மோட்டார் வாகனம் 01, Ford Everest ரக வாகனம் 02, Hyundai Terracan ஜீப் 01, Land Rover Discovery வாகனங்கள் 02, Mitsubishi Montero ஜீப் 01, Nissan பெட்ரோல் ஜீப் 03, Nissan வகை கார்கள் 02, Porsche Cayenne ரக வாகனம் 01, SsangYong Rexton ஜீப் 05, LandCruiser Sahara வகை ஜீப் 01, V 08 வாகனங்கள் 06 மற்றும் மிட்சுபிஷி ரோசா வகை குளிரூட்டப்பட்ட பேருந்து ஒன்றும் ஏலமிடப்பட்டிருந்தன.
அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த வாகனங்களைக் கொள்வனவு செய்ய மிகப்பெரிய கேள்வி காணப்பட்டதுடன், வாகன விற்பனையின் மூலம் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாகன ஏலத்துக்காக 108 வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…