அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஆயுஷ் ஷெட்டி
- Sports
- July 1, 2025
- No Comment
- 59
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார்.
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 6-ம் இடத்தில் இருக்கும் சீன தைபே வீரர் சௌ டியென் சென்னுக்கு எதிரான அரையிறுதியில் முதல் செட்டை இழந்தபோதிலும் அடுத்து இரண்டு செட்களை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஆயுஷ் ஷெட்டி.
அதைத் தொடர்ந்து, நேற்றைய இறுதிப்போட்டியில் கனடா வீரர் பிரையன் யாங்கை எதிர்கொண்ட ஆயுஷ் ஷெட்டி முதல் இரண்டு செட்டையும் வென்று சாம்பியன் ஆனார்.