மாணவர்களின் ஸ்கூல் பாக்கில்  கிடந்த பொருட்களால் அதிர்ச்சி

மாணவர்களின் ஸ்கூல் பாக்கில் கிடந்த பொருட்களால் அதிர்ச்சி

  • local
  • September 22, 2023
  • No Comment
  • 58

பாடசாலை மாணவர்களின் புத்தகபைகளில் சந்தேகத்திற்கிடமான சில பொருட்களுடன் சில இன்ஹேலர்கள் காணப்பட்டதாக கொகரெல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் புத்தக பைகளில் இவை கிடைத்ததை அடுத்து, அவற்றை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவரை கொகரெல்ல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆசிரியர் பரிசோதனை

இவர் கொகரெல்ல பகுதியில் கையடக்க தொலைபேசி மற்றும் பாகங்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார். 

கொகரெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அதே தரத்தில் கல்வி கற்கும் சில மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதித்த வகுப்பு ஆசிரியர் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத் மேற்பார்வையின் கீழ், குருநாகல் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் பணிப்புரையின் பேரில்,காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் விஜேரத்ன, பிரதான காவல்துறை குழுவொன்று சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply