ரொம்ப சின்ன பொண்ணு சார்.. பரவால்ல எனக்கு மீனா தான் வேணும் – அடம்பிடித்த பிரபல நடிகர்!

ரொம்ப சின்ன பொண்ணு சார்.. பரவால்ல எனக்கு மீனா தான் வேணும் – அடம்பிடித்த பிரபல நடிகர்!

  • Cinema
  • August 17, 2023
  • No Comment
  • 18

என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் கதாநாயகி தேர்வு குறித்து நடிகர் ராஜ்கிரண் பேசியுள்ளார்.

நடிகை மீனா
90ஸ்’களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் முதன் முறையாக நடித்தார் . 1990ல் ஒரு புதிய கீதை என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.ரஜினி,கமல்,அஜித்,என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவரும் ரஜினியும் இனைந்து நடித்த முத்து என்ற படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. ஜப்பானிலும் வெளியாகி அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்தார் மீனா.

தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கடைசியாக 2021ல் ரஜினியின் அண்ணாத்த என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவரின் 40 வருடமாக திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்று ‘மீனா 40’ என்ற நிகழ்ச்சியை நடத்தியிருந்தனர்.

அதில் மீனாவை அவருடன் நடித்த பல முன்னணி ஹீரோக்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் மேடையில் புகழ்ந்து பேசினார்கள். அதைத் தொடர்ந்து மீனாவுடன் ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் நடித்த ராஜ்கிரணை பேச அழைத்தனர்.

ராஜ்கிரண் பேச்சு
அவர் பேசுகையில் ‘என் ராசாவின் மனசிலே என்ற படத்திற்கு கதாநாயகி தேடிக்கொண்டிருக்கும்போது, ஒரு வார பத்திரிகையில் மீனாவின் புகைப்படம் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு இந்த பொண்ணு படத்தின் கதாநாயகிக்கு பொருத்தமாக இருப்பார் என்று நான் இயக்குநர் கஸ்தூரி ராஜாவிடம் சொன்னேன்.அந்த பொண்ணு யாரு? என்னன்னு விசாரிச்சிட்டு போய் பேசுங்க என்று சொன்னேன்.அதற்கு கஸ்தூரி ராஜா ‘சார்.. என்ன சார் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்க… இந்த பொண்ணு எப்படி சார்’ என்று சொன்னார். இல்ல அந்த சோழையம்மா என்ற கதாபாத்திரம், அந்த பயந்த சுபாவம் அதற்கு மீனா பொருத்தமாக இருப்பார் நீங்கள் மீனாவிடம் பேசுங்கள் என்று நான் சொன்னேன். அந்த படத்தில் சோழையம்மாவாக மீனா வாழ்ந்ததினால் தான் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்று ராஜ்கிரண் பேசியுள்ளார்.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply