யாழில் மூடப்படாத மனித புதைகுளி: உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்

யாழில் மூடப்படாத மனித புதைகுளி: உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம்

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 19

யாழ்ப்பாண மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் இந்து மயானத்தில் மூடப்படாத மனிதப் புதைகுழியில் உள்ள இறந்த உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நேற்றையதினம் (10.08.2023) ஆறுகால் மடப்பகுதியில் இறந்த குழந்தை ஒன்றின் தலைப் பகுதி வீட்டுக் காணி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமை
குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் கோம்பயன் மயானத்தில் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் குழி ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த குழி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இறந்த சிசுக்களை அடக்கம் செய்யும் பகுதியாக காணப்படுகின்ற நிலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது குறித்த குழியில் சடலங்கள் போடப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.


இந்நிலையில் குறித்த பகுதிக்கு நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply