விடுதலைப் புலிகளின் தலைவர் அன்றே கூறிய விடயம்! ஆனால் கைகட்டி வேடிக்கை பார்க்கவும் மாட்டோம் – கொந்தளிக்கும் சிறீதரன்

விடுதலைப் புலிகளின் தலைவர் அன்றே கூறிய விடயம்! ஆனால் கைகட்டி வேடிக்கை பார்க்கவும் மாட்டோம் – கொந்தளிக்கும் சிறீதரன்

  • local
  • August 15, 2023
  • No Comment
  • 28

பௌத்த விகாரைகளை தமிழர்கள் பிடுங்கிக் கொள்ளப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என மேர்வின் சில்வா கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.இது பலிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச்சேவை சிறீதரனை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்

மேலும் கூறுகையில், 1985இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொடுத்த செவ்வியொன்றில் கூட “நாங்கள் ஆயுதங்களை விரும்பி தூக்கவில்லை. எங்களுடைய மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டது” என்று கூறினார்.

ஆகவே மீண்டும் ஆயுதங்களை எங்களுடைய கைகளில் திணிக்க வேண்டுமென மேர்வின் சில்வா போல, சரத் வீரசேர போல, விமல் வீரவன்ச போல ஆட்கள் நினைக்கின்றார்கள் என்றால் அப்படியொரு சந்தர்ப்பத்தை நாங்கள் சந்திக்க தயாராக இருக்கின்றோம்.

அவர்கள் தலையை கொய்தால் நாம் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று மேர்வின் சில்வா கருதுவது இந்த நவீன உலகத்திற்கு பொருந்துமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply