நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

  • local
  • August 17, 2023
  • No Comment
  • 47

சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோருக்கான கொடுப்பனவுகளை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சர் தமது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,அடுத்த சில நாட்களில் 647,683 பேருக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காத்திருப்போர் பட்டியல் உட்பட 517,962 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 88,602 பேருக்கு விசேட தேவையுடையோருக்கான உதவித் தொகையும், 41,119 பேருக்கு சிறுநீரக நோயாளர் உதவித்தொகையும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதியோர் கொடுப்பனவு அஞ்சல் அலுவலகங்கள் ஊடாகவும் விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply