ரஷ்யாவுக்கான ட்ரோன்கள் விற்பனை! ஈரானுக்கு செக் வைத்துள்ள அமெரிக்கா

ரஷ்யாவுக்கான ட்ரோன்கள் விற்பனை! ஈரானுக்கு செக் வைத்துள்ள அமெரிக்கா

  • world
  • August 17, 2023
  • No Comment
  • 60

உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கைக்கு மத்தியில் ஈரானுக்கு அமெரிக்கா சலுகையொன்றினை அறிவித்துள்ளது. 

இதன்படி, ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் வழங்குவதை நிறுத்தினால் ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரான் அதன் அதிநவீன ஆளில்லா தாக்குதல் ட்ரோன்களை ரஷ்யாவிற்கு விற்பனை செய்து வரும் நிலையில், ஈரானுக்கு அமெரிக்கா சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி, ரஷ்யாவிற்கு ஈரான் செய்து வரும் ட்ரோன் விற்பனையை நிறுத்தினால், அதற்கு பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக அமெரிக்கா சலுகை வழங்கியுள்ளது.

இதனுடன் தெஹ்ரான் மாஸ்கோவிற்கு ஆளில்லா ட்ரோன்களை விற்பனை செய்வதை நிறுத்துவதுடன், ட்ரோன் தொடர்பான உதிரிபாகங்களையும் ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என வாஷிங்டன் வலியுறுத்தியுள்ளது.

 

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply