தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு

தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு

  • world
  • August 25, 2023
  • No Comment
  • 92

வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷ்ய அரசு திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்னர் படை குற்றம்சாட்டியுள்ளது.

மாஸ்கோவில் இருந்து சென்ற தனியார் வர்த்தக விமானம், புறப்பட்டு 100 கிலோ மீட்டரில் வானில் இருந்து புகையுடன் கீழே விழுந்து நொறுங்கியது.3 விமானிகளுடன் பயணம் செய்த 7 பேரின் பட்டியலில் ப்ரிகோஷின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக ரஷ்ய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ப்ரிகோஷின் சென்ற விமானத்தை திட்டமிட்டே ரஷ்ய விமானப் படையினர் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

உயிருடன் இருப்பதுதான் நல்லது
இதற்கிடையே, வாக்னர் படையினர் வெளியிட்ட காணொலியில், “ப்ரிகோஷின் உயிரிழந்ததாக தகவல் பரவி வருகின்றது. அவ்வாறு அவர் உயிரிழந்தால், அதற்கு காரணம் புடின் அரசின் கொலை முயற்சிதான் என்று நேரடியாக நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.மேலும், ப்ரிகோஷின் மரணம் குறித்த தகவல் உறுதிசெய்யப்பட்டால், மாஸ்கோவை நோக்கி நீதிக்காக மீண்டும் அணிவகுப்போம் என்றும் அவர் உயிருடன் இருப்பது உங்களுக்குதான் நல்லது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை சில ரஷ்யச் செய்தி நிறுவனங்களும் கூட ப்ரிகோஜின் விமானம் ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என கூறுகிறார்கள்.

இருப்பினும், ரஷ்யா தரப்பில் இருந்து இதுவரை யாரும் இந்த விடயத்தை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply