மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு :மழைக்கால சரும பராமரிப்பு
- lifestyle
- October 16, 2023
- No Comment
- 12
காலநிலை மாற்றத்தால் சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். கோடைகாலத்தில் பருவமழை பெய்தால் நாம் அனைவரும் மகிழ்வோம். ஆனால் இது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி தெரியுமா?
மழைக்காலம் என்பது ஈரப்பதத்தை அதிகரிக்கும். இந்த ஈரப்பதம் ஆரோக்கியமான சருமத்தை பாதித்து முகத்தில் பிரேக்அவுட்கள், பருக்கள் போன்றவை ஏற்படுத்தும். இந்த வேளையில் சருமத்தை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம்.
ஆகவே மழைக்காலத்தில் முகத்தை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிந்துக்கொள்வோம்.
சருமமானது எண்ணெய் தன்மையில் இருந்தால் முகப்பரு ஏற்படும். அதை தவிர்ப்பதற்கு கடலை மாவு பயன்படுத்தி தினமும் குளிக்கலாம். அல்லது எண்ணெய் தன்மை இல்லாத இயற்கை சோப் பயன்படுத்தலாம்.
ஒரு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஆவி பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
எப்போதும் ஈரமான டிஸ்ஸுவை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை சுத்தம் செய்யலாம் மற்றும் சருமத்தில் அழுக்குகளையும் அகற்றிவிடலாம்.
சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க தண்ணீர் அவசியம். எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மழை காலத்தில் மாய்ஸ்சரைசர்கள் மற்றும் எண்ணெய் சார்ந்த சீரம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக ஜெல் சார்ந்த மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்தலாம்.
எப்போதும் டோனரை வைத்துக்கொள்ளவும். உங்கள் சருமத்தை குளிர்விக்க வெள்ளரி மற்றும் புதினா டோனர்களை பயன்படுத்துவது சிறந்தது.
எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது நேரடியாக சருமத்தை பாதிக்கும்.
மது அருந்துதல் உங்கள் சருமத்தில் உள்ள அதிகபடியான நீரை உறிஞ்சும். இது சருமத்தை மந்தமாகவும் பொலிவு இல்லாமலும் வைத்திருக்கும்.
பப்பாளி பழத்தை மிக்ஸியில் அரைத்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிட்டு, கழுவினால் சருமம் பளிச்சிடும்.
மோரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
ஆலிவ் ஆயிலில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் வைத்து கழுவ வேண்டும்.
வேப்பிலை 20 கிராம், அதிமதுரம் 10 கிராம், கிச்சிலிக்கிழங்கு 20 கிராம், காயவைத்த ரோஜா இதழ் 20 கிராம், நெல்லிப்பொடி 20 கிராம், லோதீராப்பட்டை 10 கிராம் ஆகியவற்றை அரைத்து பின் தண்ணீர் சேர்த்து தினழும் குளிக்கும் போது பயன்படுத்தலாம்.
அவகேடோவில் ஈரப்பசையை தக்க வைக்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே அதனை மசித்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
வாழைப்பழத்திலும் சரும வறட்சியை தடுக்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே அதனைப் பயன்படுத்தியும் ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு மசித்த வாழைப்பழத்தை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் தேன் பயன்படுத்தி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள் ஃபேஸ் பேக் குளிர்காலத்திற்கு உகந்தது. மஞ்சள் தூளுடன் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால் முழு பலனையும் பெறலாம்.
- Tags
- life style