இண்டிகோ விமானத்தில் இரத்த வாந்தி எடுத்து பயணி உயிரிழப்பு

இண்டிகோ விமானத்தில் இரத்த வாந்தி எடுத்து பயணி உயிரிழப்பு

  • world
  • August 23, 2023
  • No Comment
  • 68

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.

மும்பையில் இருந்து திங்கட்கிழமை(21.08.2023) ராஞ்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்திலே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சிகேடி மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த 62 வயதான அந்த நபருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

திடீரென இரத்த உறைவு
அந்த பயணிக்கு திடீரென இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசரகால சூழ்நிலையில் விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.விமான நிலையத்தில் அவர் இறக்கிவிடப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர் உடனடியாக கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply