Manipur Violence: “நான் கட்டிய கால்பந்து மைதானத்தை எரித்துவிட்டார்கள்!”- சிங்லென்சனா சிங் வருத்தம்

Manipur Violence: “நான் கட்டிய கால்பந்து மைதானத்தை எரித்துவிட்டார்கள்!”- சிங்லென்சனா சிங் வருத்தம்

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 57

மணிப்பூரைச் சேர்ந்த இந்தியக் கால்பந்து வீரரான சிங்லென்சனா சிங் கோன்ஷம் மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டது குறித்துப் பேசியிருக்கிறார்.

பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில் தொடர்ந்து மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது.

குறிப்பாக மே 4-ம் தேதி குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேசிய அளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இந்த மணிப்பூர் கலவரத்திற்கு எதிராகப் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உட்படப் பலரும் கண்டனம் தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர்.

சிங்லென்சனா சிங் கோன்ஷம்

இந்தக் கலவரத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்களது உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் மணிப்பூரைச் சேர்ந்த இந்தியக் கால்பந்து வீரரான சிங்லென்சனா சிங் கோன்ஷம் இந்தக் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய சிங்லென்சனா, “இந்தக் கலவரம் எங்களிடமிருந்த அனைத்தையும் பறித்துவிட்டது. எங்கள் வீடு தீக்கிரையாக்கப்பட்ட செய்தியை நான் கேள்விப்பட்டேன். அதுமட்டுமின்றி சுராசந்த்பூரில் நான் கட்டிய கால்பந்து  மைதானமும் எரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தியைக் கேட்டு நான் மன வேதனை அடைந்தேன். ஏனென்றால், திறமை இருந்தும் பணம் கட்டி பயிற்சிக்குச் செல்ல முடியாத பல இளம் வயதினர் பயிற்சி பெற, ஒரு மைதானத்தை உருவாக்க வேண்டும்.

அவர்கள் சிறந்த வீரர்களாக உருவாகி நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய கனவாக இருந்தது. ஆனால் இந்த வன்முறைச் சம்பவத்தால் என் கனவு சிதைந்திருக்கிறது” என்று மனம் வருந்திப் பேசியிருக்கிறார். 

Related post

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்  ஆயுஷ் ஷெட்டி

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார்…

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர்…
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…

Leave a Reply