சிசுக்கொலை வழக்கில் சிக்கிய லூசி லெட்பி: இறுதி தீர்ப்பை வழங்கியது பிரித்தானிய நீதிமன்றம்

சிசுக்கொலை வழக்கில் சிக்கிய லூசி லெட்பி: இறுதி தீர்ப்பை வழங்கியது பிரித்தானிய நீதிமன்றம்

  • world
  • August 22, 2023
  • No Comment
  • 89

பிரித்தானிய வைத்தியசாலையொன்றில் புதிதாகப் பிறந்த 07 சிசுக்களை கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக கைதாகிய பிரித்தானிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

33 வய­தான லூசி லெட்பி எனும் குறித்த பெண், 2015 ஜூன் மற்றும் ஒக்­டோபர் மாதங்­க­ளுக்கு இடையில் 5 குழந்தை­க­ளையும் 2016 ஜூன் மாதம் மேலும் இரு குழந்­தை­க­ளையும் பல்­வேறு முறை­களில் கொலை செய்தார் எனவும் மேலும் 6 குழந்­தை­களை கொல்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டார் எனவும் குற்­றச்­சாட்டுகள் சுமத்தப்பட்­டி­ருந்­தன.

ஊசி மூலம் காற்றை செலுத்­தியும், பல­வந்­த­மாக பால் கொடுத்தும், இன்­சுலின் மூலம் நஞ்­சூட்­டியும் வேண்டுமென்றே அவர் குழந்­தை­களை கொலை செய்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்நிலையில் பிரித்தானியாவின் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து லூசி லெட்பிக்கு ஆயுள்தண்டனை விடுதிக்கப்பட்டுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply