கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள்: பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள்

கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள்: பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள்

  • local
  • August 7, 2023
  • No Comment
  • 14

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த விகாரை ஒன்று மீளவும் நிறுவப்பட்டு நேற்றைய தினம்(05.08.2023) விசேட பௌத்த நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை அடுத்து மாதவன மயிலத்தமடு பகுதிக்கு விரைந்து வந்த பெரும்பான்மை இனத்தவர்களை சேர்ந்த பலருக்கு கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளும் துண்டு துண்டாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு
மாதவனை மயிலத்தமடு பகுதியில் இருக்கும் காணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் கால்நடைக்களுக்காக ஒதுக்கப்பட்ட காணியாக இருக்கின்ற காரணத்தினால், பண்ணையாளர்கள் குறித்த காணி விடயம் சம்பந்தமாக தங்களது பிரச்சினைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனினும் மேல் நீதிமன்றம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றங்கள் போன்றவற்றில் தடை உத்தரவு காணப்படுகின்ற போதிலும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பெரும்பான்மை இனத்தவர்கள் புத்த விகாரை அமைத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவது பெரும் சவாலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அண்மையில் மட்டக்களப்பு விஜயம் செய்த பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அனைவரது கவனத்திற்கு கொண்டு சென்றும் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம் இன்றுவரை இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக இந்த நிலை இடம்பெருமையானால் ஒரு இன முறுகளை ஏற்படுத்த கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் பண்ணையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply