“தென்னிந்திய சினிமாவின் அலையை ஷாருக்கின் `பதான்’ படம்தான் தடுத்து நிறுத்தியது!” – ராம் கோபால் வர்மா

“தென்னிந்திய சினிமாவின் அலையை ஷாருக்கின் `பதான்’ படம்தான் தடுத்து நிறுத்தியது!” – ராம் கோபால் வர்மா

  • Cinema
  • August 3, 2023
  • No Comment
  • 54

பாலிவுட் இயக்குநரான ராம் கோபால் வர்மா, தென்னிந்திய சினிமாவின் அலையை ஷாருக் கானின் ‘பதான்’ திரைப்படம்தான் தடுத்து நிறுத்தியது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் தயாரிப்பில், விஷால் – சேகர் இசையமைப்பில், ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் வசூல் சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.

பாலிவுட் திரையுலகமே பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்து வந்தபோது நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படமே வசூல் சாதனை படைத்து பாலிவுட்டிற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பாலிவுட் இயக்குநரான ராம்கோபால் வர்மா, தென்னிந்திய சினிமாவின் அலையை ஷாருக் கானின் ‘பதான்’ திரைப்படம்தான் தடுத்து நிறுத்தியது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

இதுதொடர்பாக பேசிய அவர், “இந்தியாவில் நிலவி வந்த தென்னிந்திய சினிமாவின் அலையை ஷாருக் கானின் ‘பதான்’ திரைப்படம்தான் தடுத்து நிறுத்தியது. தென்னிந்தியப் படங்களுக்கே அதிக வரவேற்பு இருக்கிறது.

 

ராம் கோபால் வர்மா

இந்திப் படங்கள் இனிமேல் வெற்றி பெற முடியாது என மக்கள் மத்தியிலிருந்த மாயையை அப்படம் உடைத்தெறிந்தது. ஒரு படம் வெற்றி பெறுவதற்கு அது சிறப்பாக இருந்தாலே போதுமானது. தெற்கு, வடக்கு எனப் பிரித்துப் பார்ப்பதற்கு அதில் ஒன்றும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply