வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

  • local
  • August 16, 2023
  • No Comment
  • 61

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் விசேட தேவைகளுக்கு தேவையான லொறிகள் மற்றும் ட்ரக் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் கீழ் தடை காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்கப்பத்திரம் வழங்கப்படாத வாகனங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவித்ததன் பின்னர் CIF பெறுமதியில் 30% வரி செலுத்தி விடுவிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள், விசேட தேவைகளுக்காக மற்றும் பொருள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள் மற்றும் ட்ரக் வாகன இறக்குமதிக்கு (14) நள்ளிரவு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குப்பைகளை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் லொறிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற விசேட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களும் இதன் கீழ் அனுமதிக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பதன் மூலம் பயணிகள் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதுடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply