இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிக்கு வித்திட்ட தமிழன்: குவியும் பாராட்டுக்கள் – செய்திகளின் தொகுப்பு

இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிக்கு வித்திட்ட தமிழன்: குவியும் பாராட்டுக்கள் – செய்திகளின் தொகுப்பு

  • world
  • August 24, 2023
  • No Comment
  • 80

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செலுத்திய  சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி, சாதனை படைக்கும் நிலைக்கு வித்திட்டவர் ஒரு தமிழர் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் என்ற விஞ்ஞானியே அவராவார். சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக 2019ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி இவர் நியமிக்கப்பட்டார்.

2016ஆம் ஆண்டு, வீரமுத்துவேல் விண்கலத்தின் மின்னணுப் பொதியில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள முறை குறித்த தனது கட்டுரையை எழுதியிருந்தார். அவரது ஆய்வுக் கட்டுரை தொடர்பாகப் பெங்களூரில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இவர் கண்டறிந்த இந்த தொழில்நுட்பம் நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்பட்டது. இதனால் அந்த தொழில்நுட்பம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதுவே வீரமுத்துவேலை 2019ஆம் ஆண்டு சந்திரயான் 3 திட்ட இயக்குநராக்கியது. சந்திரயான் 2 திட்டத்திலும் வீரமுத்துவேல் முக்கிய பங்காற்றினார்.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply