அயன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நான் தான்.. உண்மையை கூறிய பிரபல நடிகர்

அயன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நான் தான்.. உண்மையை கூறிய பிரபல நடிகர்

  • Cinema
  • August 16, 2023
  • No Comment
  • 24

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் அயன். சூர்யா ஹீரோவாக நடிக்க தமன்னா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஜெகன், பிரபு, Akashdeep Saigal, கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மாபெரும் அளவில் வெற்றிபெற்ற இப்படம் இன்று வரை சூர்யாவின் கேரியரில் முக்கியமான டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தில் மிகமுக்கியமான சிட்டி பாபு ரோலில் ஜெகன் நடித்திருப்பார்.

உண்மையை கூறிய நடிகர்
சூர்யாவுடன் இணைந்து பயணிக்கும் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜெகன் கிடையாதாம். நடிகர் கிருஷ்ணா தான் இந்த ரோலில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தாராம்.

இயக்குனர் கே.வி. ஆனந்த் நடிகர் கிருஷ்ணாவிடம் இந்த ரோலில் நடிக்க கேட்டுள்ளார். ஆனால், அப்போது நடிகர் கிருஷ்ணா, ‘நான் நடிப்பில் இருந்து விலகப்போகிறேன்’ என கூறியுள்ளார். இதனால் இந்த ரோலில் நடிக்கும் வாய்ப்பும் கிருஷ்ணா கைவசம் இருந்து கைநழுவி போயுள்ளது.இந்த தகவலை நடிகர் கிருஷ்ணா பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். இவர் சண்டைக்கோழி, கவண், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…
முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின் தற்போதைய நிலை

முதல் படமே 100 கோடி வசூல் : டான் இயக்குனர் சிபியின்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கியிருந்தார். இவர் அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். முதல்…
லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

லியோவிஜய் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கவுதம் மேனன்,…

Leave a Reply