அமெரிக்காவை தாக்கிய ஹிலாரி சூறாவளி: பெரும்பகுதிக்கு பேரழிவு

அமெரிக்காவை தாக்கிய ஹிலாரி சூறாவளி: பெரும்பகுதிக்கு பேரழிவு

  • world
  • August 21, 2023
  • No Comment
  • 75

அமெரிக்காவில் 84 ஆண்டுகளின் பின்னர் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய முதல் வெப்பமண்டல சூறாவளி, அம்மாநிலத்தில் வெள்ள பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

ஹிலாரி சூறாவளி என பெயரிடப்பட்ட குறித்த புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தால் தெற்கு கலிபோர்னியாவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி மணிக்கு 119 கிலோமீட்டர் வேகத்தில், நேற்று மெக்சிகோவில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்தில் இருந்து கரையை கடந்தது.

மேலும், சூறாவளியால் மெக்சிகோவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு பேரழிவு
இந்நிலையில், தென்மேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு பேரழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகருக்கு அருகே 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதனால் பொருள் சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலையும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிடவில்லை.

இதனையடுத்து, கடற்கரைகளுக்குள் மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடும் புயலின் தாக்கம்
இந்நிலையில் மெக்ஸிகோவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 19,000 மீட்பு வீரர்களை மெக்சிகன் அரசாங்கம் நிலைநிறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட 1,725 பேர் மெக்சிகோ இராணுவத்தால் திறக்கப்பட்ட 35 முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், கலிபோர்னியாவில், ஐந்து புயல் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், கடும் புயலினால் ஏற்படும் விளைவுகளுக்கு தயாராக இருக்குமாறு பொதுமக்களுக்கு அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply