Harmanpreet kaur: ` 2 போட்டிகளில் ஆடக்கூடாது’ ஹர்மன்ப்ரீத்துக்கு ICC விதித்த தடையும் பின்னணியும்!

Harmanpreet kaur: ` 2 போட்டிகளில் ஆடக்கூடாது’ ஹர்மன்ப்ரீத்துக்கு ICC விதித்த தடையும் பின்னணியும்!

  • Sports
  • August 3, 2023
  • No Comment
  • 36

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட ஐ.சி.சி தடை விதித்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது.

இதில் டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஓடிஐ தொடரின் 3-வது போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் மைதானத்தில் பேட்டை வைத்து  ஸ்டெம்புகளை அடித்து அம்பயர்களை விமர்சித்திருந்தது  கடும் சர்ச்சையைக் கிளப்பியது. 

 
ஹர்மன்பிரீத் கவுர்

அதுமட்டுன்றி ஆட்டத்துக்குப் பிறகு கோப்பையை பகிர்ந்தளிக்கும் நிகழ்வின்போதும் வங்கதேச வீராங்கனைகளிடம் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதமும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  அவரது இந்த செயல்பாடுகள் விதிகளை மீறும் செயல் என்பதால் அவர் அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி தடையை  விதித்துள்ளது. அதுமட்டுமின்றி அவரது போட்டி கட்டணத்தில் 75 சதவிகிதத்தை அபராதமாகச்  செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளை ஹர்மன்பிரீத் கவுரால் விளையாட முடியாமல் போகும்.

Related post

8வது முறையாக  உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

8வது முறையாக உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ‘மெஸ்ஸி’

சிறந்த வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் ‘லயோனல் மெஸ்ஸி’ 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். சிறந்த வீரர் கடந்த 1956 முதல்…
இலங்கையின் உலக கிண்ண  அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கையின் உலக கிண்ண அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இரு வீரர்கள்!

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன. இந்த அழைப்பு இலங்கையின்…
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று(10.10.2023) இடம்பெற்ற போட்டியில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.வரலாற்று சாதனைஇந்நிலையில்,…

Leave a Reply