Hardik Pandya: “அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்யுங்கள்”- வெஸ்ட் இண்டீஸிற்கு ஹர்திக் கோரிக்கை

Hardik Pandya: “அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்யுங்கள்”- வெஸ்ட் இண்டீஸிற்கு ஹர்திக் கோரிக்கை

  • Sports
  • August 2, 2023
  • No Comment
  • 75

வீரர்களுக்கு சில அடிப்படைத் தேவைகளை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா கோரிக்கை விடுத்திருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடரை 1- 0 என்ற கணக்கில் இந்தியா வென்றதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்  இண்டீஸ் அணியைத் தோற்கடித்து  2-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “ இந்த வெற்றி ரொம்பவே ஸ்பெஷல். இது போன்ற ஆட்டத்தை தான் எதிர்பார்க்கிறேன். சக வீரர்களும் சிறப்பாக செயல்பட்டிருந்தனர்.

இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியைத்  தழுவியிருந்தால் என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். போட்டிக்கு முன்பு விராட் கோலி உடன் உரையாடினேன். அவர் சொன்ன யோசனை எனக்கு இந்தப் போட்டியில் நன்றாகக் கைக்கொடுத்தது ” என்று அணியின் வெற்றி குறித்துப் பேசியிருந்தார்.  

அதன் பின் ஹர்திக் பாண்டியாவிடம்  ஸ்டேடியம் குறித்து கேள்வி எழுப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த ஹர்திக், “ நாங்கள் விளையாடிய சிறந்த மைதானங்களில் ஒன்று. ஆனால் பயணம் செய்வதிலும், சில விஷயங்களை நிர்வகிப்பதிலும் இங்கு சிக்கல்கள் இருக்கிறது.கடந்தமுறையும் சில பிரச்சனைகளைச் சந்தித்தோம். நாங்கள் ஆடம்பரத்தை  எதிர்பார்க்கவில்லை. ஆனால் சில அடிப்படை தேவைகளை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். 

இலங்கை அணி வீரர்கள்

சமீபத்தில் ஜிம்பாப்வேவில் உலகக்கோப்பை தகுதிச்சுற்று நடந்தபோது  அந்நாட்டிற்கு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்றிருந்தனர். அப்போது  அங்கு ஹோட்டல் ரூமுக்காக இலங்கை வீரர்கள் காக்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related post

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் , கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். 2015 மற்றும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர்…
“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

“தோனி ஒரு நம்பமுடியாத வீரர்”- டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.…
வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்’ – தோல்விக்குப் பின் கில்

வெற்றிப்பாதைக்கு திரும்ப விரும்புகிறோம்’ – தோல்விக்குப் பின் கில்

நடப்பு ஐ.பி.எல் சீசனில்குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்ய, லக்னோ அணி மிட்செல் மார்ஷின் சதம் மற்றும் பூரானின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு…

Leave a Reply