வரும் பெரும்போகத்துக்கான உர விநியோகம் இன்று ஆரம்பம்

வரும் பெரும்போகத்துக்கான உர விநியோகம் இன்று ஆரம்பம்

  • local
  • October 10, 2023
  • No Comment
  • 11

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான 21 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரத்தை இன்று(10) முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்க உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, லங்கா உர நிறுவனமும் கொழும்பு வர்த்தக உர நிறுவனமும் விநியோகப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

50 கிலோகிராம் யூரியா உரம் மூடை ஒன்று 9 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

நெல் பயிரிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் உர கொள்வனவுக்காக ஒரு ஹெக்டயருக்கு 15ஆயிரம் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply