வவுனியா இரட்டை கொலை விவகாரம்: பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வவுனியா இரட்டை கொலை விவகாரம்: பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருக்கு தொலைபேசி பாவித்தமைக்காக 4 மாத கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர்.

பெண் ஒருவருடன் உரையாடல்

இச் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் கடந்த 24 ஆம் திகதி தொலைபேசி மீட்கப்பட்டதுடன், அதிலிருந்து 3292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் சென்றமை மற்றும் பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உரையாடியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

தொலைபேசி பாவித்தமை தொடர்பில் சிறைச்சாலை திணைக்களமும் நீதிமன்றுக்கு தெரிவித்த நிலையில், தொலைபேசி பாவித்த குற்றத்திற்காக பிரதான சந்தேக நபருக்கு 4 மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply