பிரசவத்தில் திடீரென தரையில் விழுந்து சிசு உயிரிழப்பு – அவசர அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு

பிரசவத்தில் திடீரென தரையில் விழுந்து சிசு உயிரிழப்பு – அவசர அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு

  • local
  • August 14, 2023
  • No Comment
  • 31

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியத்தால் சிசுவொன்று தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி கல்லஞ்சிய பகுதியைச் சேர்ந்த ரம்பேவ, டி. அது. தக்சிலா உதயங்கனி என்ற 35 வயதுடைய கர்ப்பிணி பெண் முதல் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினமே அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மகப்பேறு விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.பெற்றோர் குற்றச்சாட்டு
இதன்போது பிரசவத்தில் செவிலியர்களின் அலட்சியத்தால் சிசு தரையில் விழுந்துள்ளது.

குறித்த சிசு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்துள்ளது.அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட தாயின் நோய் குறிப்பிலும் பிரசவத்தின் போது குழந்தை தரையில் விழுந்து குழந்தையின் தலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை பிறக்கும் போது அழவில்லை என்றும், இதயக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் இறப்புச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் அவசர அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 

Related post

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய  திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களுக்கான புதிய திட்டம்

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை…
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…

Leave a Reply