நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியம் ஊற்றி கழுவிய கல்லூரி மாணவர்கள்

நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியம் ஊற்றி கழுவிய கல்லூரி மாணவர்கள்

  • Cinema
  • August 10, 2023
  • No Comment
  • 58

நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்துக் கொண்ட கல்லூரி அரங்கத்தை அந்தக் கல்லூரி மாணவர்கள் சில கோமியம் ஊற்றி கழுவிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகன், காமடியன், வில்லன் என பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நடிப்பைத் தவிர அவ்வப்போது சமூகப்பணியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், அரசியல் கருத்துக்களை பேசி அனைவரையும் ஈர்த்து வைத்திருக்கிறார்.

கோமியம் ஊற்றி கழுவிய மாணவர்கள்
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்தக் கருத்தரங்கிற்கு நடிகர் பிரகாஷ்ராஜும் கலந்துக் கொண்டிருந்தார். தனியார் அமைப்புகளுக்கு கல்லூரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த நிர்வாகத்தைக் கண்டித்து பாஜகவினரும், பாஜக மாணவ அமைப்பினரும் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.இந்நிகழ்ச்சி முடிந்து நடிகர் பிரகாஷ்ராஜ் கல்லூரியை விட்டுக் கிளம்பியதும் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பாஜக மாணவ அமைப்பினர் அந்த அரங்கம் முழுவதும் கோமியம் கொண்டு சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

23-64d3706ed6264

Related post

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர் சூரி

`நிறைய பேர் படத்தைப் பார்த்து அழுதுட்டாங்க’- ‘மாமன்’ படம் குறித்து நடிகர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை…
பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

பொய்யான குற்றசாட்டுகளை நன் முழுமையாக மறுக்கிறேன் – ரவி மோகன்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.…
நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

நடிகராகக் களமிறங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக நடிகராகக் களமிறங்கியிருக்கிறார். ரிலேசன்ஷிப் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் வகையில் இப்பாடல் தயாராகியிருக்கிறது. இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு இசையமைத்த நடிகை…

Leave a Reply