நின்று கொண்டு நீர் அருந்துவதன் நன்மை தீமைகள்!

நின்று கொண்டு நீர் அருந்துவதன் நன்மை தீமைகள்!

  • local
  • October 13, 2023
  • No Comment
  • 13

பொதுவாகவே தண்ணீர் இன்றி உலகில் உயிர்வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. மனிதனின் உடல் இயக்கத்திலும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நீர் இன்றியமையாதது.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த உயிர்காக்கும் நீரை நின்றுக்கொன்டு பருக கூடாது என நமது முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கின்றார்கள்.

சில மதங்களும் இதனை வழியுறுத்துகின்றது. நின்றுக்கொண்டு ஏன் தண்ணீர் அருந்த கூடாது ? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அறிவியல் காரணங்கள்
நம்மில் எத்தனை பேர் நின்றுக்கொண்டு குடிக்கின்றோம் சற்று சிந்தித்துப் பார்த்தால் நம்மில் பெரும்பாலானோர் அதை தினமும் செய்கிறோம். நம் வீட்டு பெரியவர்கள் எப்போதும் உட்கார்ந்த நிலையில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவதற்கு பின்னால் துள்ளியமான அறிவியல் காரணம் உள்ளது.

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் நரம்புகள் பதற்றம் அடையும், திரவ சமநிலையை சீர்குலைத்து அஜீரணத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேத மருத்துவமும் நிற்கும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்று பரிந்துரைக்கிறது. இதனால் செரிமான பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

ஆயுர்வேதத்தின்படி, நீங்கள் நின்றுகொண்டு தண்ணீரை உட்கொள்ளும்போது, ​​​​அது வயிற்றின் கீழ் பகுதிக்குச் செல்கிறது மற்றும் இது உங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்காது. மேலும் நின்று கொண்டு குடிப்பதால் உள்ளே செல்லும் தண்ணீரில் வேகமும் அதிகரிக்கும். இதனால் உறுப்புகள் சேதமடையும் வாய்ப்புகள் அதிகம்.

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது, சிறுநீரகத்தின் வடிக்கட்டுதல் தன்மையை பாதிப்படைய செய்யும் என கூறப்படுகிறது. சரியாக வடிகட்டுதல் ஆகாவிடில், சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் பாதை தொற்றுக்கள் உண்டாகலாம்.

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது, உடலின் நீர் சமநிலையை பாதிக்கிறது. இதனால், மூட்டு பிரச்சனைகள் உண்டாகலாம். மேலும் இவ்வாறு நின்றுக் கொண்டு தண்ணீர் குடிப்பது உடலில் ஏனைய உறுப்புக்களை பாதிப்படைய செய்கின்றது என அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *