களுபோவில பகுதியில் வாகன விபத்தில் சிக்கி குழந்தை மரணம்!

  • local
  • October 6, 2023
  • No Comment
  • 17

கொஹூவலை, களுபோவில பகுதியில் முச்சக்கர வண்டியொன்றுடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒரு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக களுபோவில பொலிஸார் தெரிவித்தனர்.

கொஹுவலையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த கார் ஒன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடொன்றின் நுழைவாயில் கதவில் மோதியுள்ளது.

விபத்தில் காயங்களுக்குள்ளான தாய் மற்றும் அவரது ஒரு வயது குழந்தை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply