மாணவர்களைக் கடத்தும் வெள்ளை வேன்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மாணவர்களைக் கடத்தும் வெள்ளை வேன்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 54

சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களைக் கடத்தும் வெள்ளை வேன் கொண்ட குழு ஒன்று உலாவுவதால் பிரதேச மக்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறு சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலினால் விடுக்கப்படுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப்பள்ளிவாசலின் செயலாளர் ஐ.எல்.எம் மன்சூரினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,யாசகம் பெறவருபவர்களிடம் அவதானம்
சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தின் மாளிகா வீதியில் (சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு அருகாமையில்) கடந்த திங்கட்கிழமை (07) பாடசாலை செல்லும் மாணவியொருவரை வெள்ளை வேன் கொண்ட ஒரு குழுவினால் கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் மதிய நேரமான முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை பிற இனத்தவர்கள் பர்தா உடை அணிந்து யாசகம் கேட்டு வீடுகளுக்குள் உள் நுழைகின்றனர்.


இதன் மூலமாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே, தங்கள் பிள்ளைகளைப் பாடசாலைக்கோ அல்லது வெளி இடங்களுக்கோ அனுப்பும் போது கவனமாக இருந்து மிகவும் பாதுகாப்பாகச் செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.சந்தேகத்திற்கிடமான வாகனங்கள்
தங்களின் சுற்றுப்புறங்களை உன்னிப்பாக அவதானித்து, தங்கள் பிரதேசங்களை அண்மித்த இடங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதாவது வாகனங்களோ அல்லது மனிதர்களோ நடமாடுமாடினால் அதனை பள்ளிவாசலிலோ அல்லது பொலிஸாரிடமோ அறிவிக்குமாறும் பொதுமக்கள்அறிவுறுத்தப்படுகின்றனர்.

அத்துடன் தங்கள் பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்துமாறும்கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்துடன் பகல் வேளைகளில் தங்கள் வீடுகளுக்கு யாசகம் கேட்டு வரும் பிற இனத்தவர்களிடம் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23-64d4cb5f3ed9c

Related post

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ் போதைப்பொருட்கள்  கைப்பற்றல்

2 மாதங்களில் 1,216 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 542 கிலோ ஐஸ்…

நாட்டிற்குள் நீண்ட நாட்களாக மீன்பிடி படகுகள்மூலம் கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடந்த 2 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்…
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது  தேவையற்றது

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப்பணிதற்போது தேவையற்றது

செம்மணியில் உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடிக் கடந்த காலத்தைத் தோண்டும் நடவடிக்கை, தற்போது தேவையற்ற விடயமாகும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மாறாக, எதிர்காலத்தில் அவ்வாறான…
15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ள இலங்கை மின் கட்டணம்

நாளை(12) முதல் மின் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிகப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று(11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…

Leave a Reply