அதிபரின் மகனின் திருமணத்தால் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய பாடசாலை

அதிபரின் மகனின் திருமணத்தால் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிய பாடசாலை

  • local
  • August 11, 2023
  • No Comment
  • 15

முல்லைத்தீவு வெலிஓயாவிலுள்ள பாடசாலையொன்றில் அதிபரின் மகனின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக மாணவர்களை நேரகாலத்துடன் வீட்டுக்கு அனுப்பிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வெலிஓயா கஜபாபுர முல்லைத்தீவு பரணகம பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகப் பணிபுரியும் அதிபரின் மகனின் திருமணம் 10ஆம் திகதி நடைபெற்ற நிலையில் மணமகளும் அதே பாடசாலையில் தொண்டர் ஆசிரியையாக இருப்பதால் ஆரம்பப் பிள்ளைகள் முற்பகல் 10.30க்கும் மேல் வகுப்பு பிள்ளைகள் முற்பகல் 11.00 மணிக்கும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்

பாடசாலையிலிருந்து அனுப்பப்பட்ட மாணவர்கள்
பகல் 11.00 மணியளவில் ஆசிரியர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

1 முதல் 11ம் வகுப்பு வரை நடைபெறும் இப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். சுமார் 20 பேர் ஆசிரியர்களாக பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு சிவில் பாதுகாப்பு ஆசிரியர்கள் மற்றும் ஆறு தன்னார்வ ஆசிரியர்கள் இருப்பதும் தெரியவந்தது.தற்போதைய காலகட்டத்தில் ஒருநாள் கூட மாணவர்களை பாடசாலைககு அனுப்புவது சிரமமாக உள்ள நிலையில் பாடசாலையின் இந்த செயற்பாட்டால் பெற்றோர் மிகவும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்

Related post

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள மனித புதைக்குழி அகழ்வுப்பணிகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் (20.11.2023) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு…

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக…
2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க அமைச்சர்!

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி – நிதி இராஜாங்க…

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, குறித்த…

Leave a Reply