இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு விபத்து

இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு விபத்து

  • world
  • August 10, 2023
  • No Comment
  • 161

இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர் படகு விபத்துக்குள்ளானதில் 41 பயணிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.துனிசியாவிலிருந்து இத்தாலியை நோக்கி பயணித்த படகில் பயனித்த புலம்பெயர் பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

குறித்த விபத்தில் என உயிருடன் மீட்கப்பட்ட 4 பேர் வழங்கிய தகவலுக்கமையவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

1800 பேர் உயிரிழப்பு
மேலும் உயிருடன் தப்பியவர்களில் 3 ஆண்கள் மற்றும் 1 பெண் உள்ளடங்குகிறார்கள்.மேலும், மூழ்கிய படகில் மூன்று குழந்தைகள் உட்பட 45 பேர் சென்றதாக மீட்புப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்

லம்பேடுசா பகுதியானது இத்தாலியின் தெற்கே உள்ள தீவாகும்.மேலும், இரண்டாயிரமாம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து, குறிப்பாக லிபியாவிலிருந்து வந்து, குடியேறுபவர்களுக்கான ஐரோப்பிய நுழைவுப் புள்ளியாக இந்த தீவு பகுதி மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வட ஆபிரிக்காவிலிருந்து இத்தாலியை சென்றடைவதற்கான முயற்சிகளில் இந்த வருடம் 1800 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…

Leave a Reply