கனடாவில் கல்வி கற்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம்: அம்பலமாகும் புதிய மோசடி

கனடாவில் கல்வி கற்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம்: அம்பலமாகும் புதிய மோசடி

  • world
  • August 10, 2023
  • No Comment
  • 46

கனடாவில் கல்வி கற்பதற்கு தயாராக இருந்த இந்திய மாணவர்கள் சிலருக்கு கனடாவிலுள்ள கல்லூரி ஒன்று ஏமாற்றமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் கல்வி கற்பதற்காக தயாராகியிருந்த இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கனடாவின் Scarborough வில் உள்ள Northern College எனும் கல்லூரியில் பயில்வதற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்துள்ளனர்.

அடுத்த மாதத்தில் வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், திடீரென அவர்களுடைய விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கல்லூரி நிர்வாகம் தகவல் அனுப்பியுள்ளது.காத்திருந்த மாணவர்களில் பலர் விமான டிக்கெட்டுகளை வாங்கிவிட்டு, தங்குமிடத்துக்கும் பணம் செலுத்தியுள்ளனர்.

கனடாவிலுள்ள கல்லூரிகள் பல வருவாய்க்காக உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன.விண்ணப்பங்கள் இரத்து
அத்துடன், விண்ணப்பிக்கும் எல்லா மாணவர்களுக்கும் விசா கிடைக்கப்போவதில்லை என கல்லூரி நிர்வாகம் அறிந்திருப்பதால் இது போன்ற கல்லூரிகள் கல்லூரியில் இருக்கும் இடங்களை விட அதிக விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்கின்றன.

இதனால் இருக்கைகளை மிஞ்சிய விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றமையால் அந்த மாணவர்களின் விண்ணப்பங்களை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுகின்றன

Related post

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

கட்சியைத் தொடங்குவேன் – ஈலோன் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட்…
இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாள் இன்றாகும்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான நாள் இதுவாகும், மேலும் வெப்பநிலை தொடர்ந்து பதிவு செய்யப்படுவதால், இது குறித்த புதுப்பிப்புகள்உறுதியாகவும் வேகமாகவும் பெறப்படுகின்றன. சமீபத்திய அதிகபட்ச வெப்பநிலை கென்ட்டின்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனி வியாஜம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளர் . இன்று (11) காலை பிரண்டென்பேர்க் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .…

Leave a Reply