உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

  • local
  • January 11, 2026
  • No Comment
  • 17

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை 2,086 பரீட்சை மையங்களில் இந்தப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக, மாணவர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டு உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

டிட்வா சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டைகளை இழந்த மாணவர்கள், கிராம அதிகாரியின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் பரீட்சைக்குத் தோற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், பரீட்சை நிலையங்களுக்கு தடையின்றிச் செல்வதை உறுதிப்படுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related post

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…