வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும்  அவரது மனைவி கைது

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது

  • world
  • January 3, 2026
  • No Comment
  • 27

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுவேலா ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி மீது நியூயோர்க்கின் தெற்கு மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் போதைப்பொருள் பயங்கரவாதம்,கொக்கெய்ன் இறக்குமதி சதி மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படத்தை அடுத்து இவர்களது கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது .

வெனிசுவேலாவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தொடர் தாக்குதல்களின் பின்னர் ஜனாதிபதியும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வெனிசுவேலா நேரப்படி இன்று (03) காலை வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதன்போது, வெனிசுவேலாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…