சுவிட்சர்லாந்தில்  தீ  விபத்து  40 ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் தீ விபத்து 40 ற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

  • world
  • January 1, 2026
  • No Comment
  • 26

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா பனிச்சறுக்கு சுற்றுலாத் தளத்திற்கு அருகாமையில் பாரிய தீப்பரவல் இடம்பெற்றுள்ளது .

அந்நாட்டு அதிகாரிகள் இத்தீவிபத்து பற்றி தெரிவிக்கையில் சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா பனிச்சறுக்கு சுற்றுலாத் தளத்திற்கு அருகாமையில் எற்பட்ட தீவிபத்தில் 40 பேர் உயிரிழந்திருந்ததுடன் 100 ற்கும் அதிகமானோர் பாரிய காயங்களுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

உயிரிழந்தவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சடலங்களை அடையாளம் காணும் பணிகள் தற்பொழுது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாலிஸ் மாகாண மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) நோயாளிகளால் நிரம்பியுள்ள நிலையில், தீக்காயங்களுக்கு விசேட சிகிச்சை அளிக்கும் பிற மருத்துவமனைகளுக்கு உலங்கு வானூர்திகள் மூலம் காயமடைந்தோர் கொண்டு செல்லப்படுகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில் அவசர கால மீட்புப் பணிகள் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

எனினும், தீ விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…