ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
- local
- January 1, 2026
- No Comment
- 27
புத்தாண்டு வாழ்த்து செய்தியிலே நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் 2025ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக 2025ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானதாக ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 48 ஆண்டுகளுக்கு பின்னர் மிகக் குறைந்த வரவு செலவு திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை, பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை ஆகியன குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டை போன்ற திட்டங்களை செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை 2025ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.