உள்ளூராட்சி மன்றங்களின் பலத்தை நிலைநாட்ட  தயார்-  சஜித் பிரேமதாச

உள்ளூராட்சி மன்றங்களின் பலத்தை நிலைநாட்ட தயார்- சஜித் பிரேமதாச

  • local
  • May 19, 2025
  • No Comment
  • 73

எதிர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாச மாளிகாவத்தை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் பலத்தை நிலைநாட்டுவதற்கு எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன் வாழ்வாதாரத்தை அதிகரிக்க முடியா த நிலை காணப்படுகிறது

இந்தநிலையில் பொறுப்பு மிக்க எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் எமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளோம்.ஆளும் தரப்பினர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிக்கு உரிமை இல்லை என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

எதிர்க்கட்சியை இல்லாதொழிக்க இந்த அரசாங்கம் தற்போது பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டு வருகிறது.

எதிர்க்கட்சி பெரும்பான்மை வகிக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு ஜனநாயக கட்டமைப்பிற்குள் எடுக்க முடியுமான உச்சபட்ச நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…