சபுகஸ்கந்தயில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் கைது
- local
- May 15, 2025
- No Comment
- 35
சபுகஸ்கந்த பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 கோடியே 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கஹத்துடுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.