பாப்பரசரின் முதற்கட்ட  தெரிவு  தீர்மானம் இன்றி முடிவு .

பாப்பரசரின் முதற்கட்ட தெரிவு தீர்மானம் இன்றி முடிவு .

  • world
  • May 8, 2025
  • No Comment
  • 52

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது.

கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று(07) ஆரம்பமானது.

உலகளாவிய ரீதியில் இருக்கும் 252 கத்தோலிக்க கர்தினால்களில் 135 பேர் கூடி புதிய பாப்பரசர் ஒருவரை தெரிவு செய்யவதற்காக சிஸ்டைன் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

ஆராதனையைத் தொடர்ந்து கர்தினால்கள் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறும் அறைக்குள் சென்றனர்.

புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரையில் கர்தினால்கள் வௌி உலகத்துடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாது.

நற்செய்தி கிடைக்கப்பெறும் வரையில் ஆயிரக்கணக்கான மக்கள் வத்திக்கானில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்தனர்.

வத்திக்கான் நேரப்படி நேற்றிரவு 9 மணியளவில் சிஸ்டைன் தேவாலயத்தின் கூரையில் உள்ள புகைபோக்கியில் இருந்து கறுப்பு புகை வௌியானது.

முதல் சுற்று இரகசிய வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படாமையை இது குறிக்கின்றது.

அதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு இன்றும்(08) இடம்பெறவுள்ளது.

Related post

பிரித்தானியாவில்  கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் கோர விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர். பிரித்தானியா கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் அதிகாலை 12.45 மணியளவில் தனியார் வாகனம்…
சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சர்வாதிகாரிகளையும் அமெரிக்கா கைது செய்ய வேண்டும்- வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினும் கைது செய்யப்படுவாரா என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமெரிக்க…
கனடாவில்   கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் கனரக வாகனம் மோதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. கனடாவில் ரொரன்ரோ, இட்டோபிகோக் நகரில் இடம்பெற்ற…