மகிந்த ராஜபக்ச அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார் – நாமல் சவால்
- local
- May 1, 2025
- No Comment
- 40
மொட்டுக் கட்சியின் தற்போதைய போக்கைக் கண்டு அரசாங்கம் பயந்தாலும், தனது கட்சி ஜனாதிபதியைக் கண்டு பயப்படவில்லை எனக் கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இன்று நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.
இதன் போது உரையாற்றிய நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கத்தின் கீழேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவார் என்றும் கூறினார்.
“நாங்கள் ஏமாற்றுதலை சகித்துக்கொண்டோம் – இப்போது எழுந்து நிற்போம்” என்ற கருப்பொருளைக் கொண்ட பேரணியில் சி.பி. ரத்நாயக்க மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.