ஷேக் ஹசீனா விவகாரம் – இன்டர்போலின் உதவியை நாடும் பங்களாதேஸ்
- world
- April 20, 2025
- No Comment
- 45
ஷேக் ஹசீனாவை கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியை பங்களாதேஸ் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஸில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து யூனுஸ் தலைமையில் பங்களாதேஸில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனவே அவரை தமது நாட்டிற்குத் திருப்பி அனுப்பும்படி பங்களாதேஸ் இடைக்கால அரசாங்கம் இந்தியாவைக் கடந்த ஆண்டு கோரியிருந்தது.
எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் பெரிதாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை கைது செய்ய இன்டர்போலின் உதவியை பங்களாதேஸ் நாடியுள்ளது.