RCB அணிக்கு 158 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
- Sports
- April 20, 2025
- No Comment
- 50
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 158 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.