டிசம்பர் மாத பாடசாலை தவணை விடுமுறையில் மாற்றம்

டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) உயர்தரப் பரீட்சை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் பரீட்சை நடக்கவுள்ளது. இதன்படி யாரேனும் விண்ணப்பிக்க இருந்தால் அவர்களுக்கு 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை தொடர்பான கால அட்டவணை அடுத்த வாரமாளவில் வெளியிடப்படும்.

இதேவேளை பாடசாலை விடுமுறை இம்முறை டிசம்பர் 22ஆம் திகதியளவில் வழங்கப்படலாம். ஆரம்ப பிரிவுகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். பரீட்சை முடிவடைந்த பின்னர் மற்றைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும்” என்றார்.

Related post

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

உயர்தர பரீட்ச்சைகள் நாளை ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் டிட்வா சூறாவளி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே -அமைச்சர் விமல் வீரவங்ச

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வேலைத்திட்டமே…

இன்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெற வலியுறுத்தியும், அதற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும்,…
வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை – வளிமண்டலவியல்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது 2026 ஜனவரி 10ஆம் திகதி காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில்…

Leave a Reply