விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பலன்களும்!
- Spirituality
- September 18, 2023
- No Comment
- 14
Back to Top
Timesoflk is committed to presenting news with factual accuracy, impartiality, and a focus on stories that matter to the Tamil-speaking population. It is considered a reliable source for staying informed about developments and issues affecting the Sri Lankan Tamil community.
ஆவணி மாதம் வரும் ‘வளர்பிறை சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம். ஆவணிச் சதுர்த்தி நாளான இன்று (18.09.2023) நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கப்பெறும்.
எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது.
எனவேதான் ‘மூல கணபதி’ என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம். கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை ‘கணபதி’ என்று சொல்கின்றோம்.
எனவே, நாம் ‘தேவ’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘மனித’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘அசுர’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார்.
வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்கிரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.
விநாயகர் விரதம்
விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மஞ்சளையும் பிள்ளையாராக பிடிக்கலாம். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
புரட்டாதி மாத வளர்பிறை சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் 3 நாட்கள், 7 நட்களிலேயே கரைத்து விடுகிறார்கள்.
விரதம் கடைப்பிடித்து பயனடைந்தோர்
பார்வதி தேவியே விரதமிருந்து கடைப்பிடித்து சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈஸ்வரனைக் கணவராக அடைந்தார்.
ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.
விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
சூரசேனன் என்னும் மன்னன் இந்த விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.
Bringing Sri Lanka’s Stories to the World – Your Trusted Source for Timely and Insightful News.
Copyright @ TimesofLK - 2021